பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமெரிக்க இந்திய மருத்துவர்!

Corona Patients

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனாவால் அதிகல் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக பிரேசில் உள்ளது. பிரேசிலில் 38 லட்சத்து 6 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது வரை ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் அங்கு இந்த நோய்த் தொற்றில் காரணமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது.

Corona Patients

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜீவ் பெர்ணான்டோ என்ற மருத்துவர், கொரோனாவால் நிலைகுலைந்துள்ள பிரேசிலின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு மக்கள் படும் சிரமங்களை பார்த்த அவர், அங்குள்ள ஏழை மக்களுக்கு முகக்கசவசங்களை இலவசமாக விநியோகித்து மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையும் அளித்துவருகிறார். இந்திய வம்சாவளிகள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்குள்ள மனிதர்களை இந்தியர்கள் போன்றே நினைப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களுக்கு தான் செய்யும் உதவி எனக்கூறும் ராஜீவ், கொரோனா குறித்த அனுபவம் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்.

இதையும் படிக்கலாமே: கருப்பின இளைஞர் சுடப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மல்லுக்கட்டும் ட்ரம்ப்!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa