3 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல்

Trump-Joe biden

அதிபர் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் பிரதானமான 3 மாநிலங்களில் முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் 46 ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றுவரை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அதிபர் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் களம் கண்டனர்.

இந்நிலையில் தற்போது உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவல் காரணமாக கிட்டத்தட்ட 10 கோடி அமெரிக்கர்கள் ஏற்கனவே தபால் வழியில் தங்களது வாக்குகளை செலுத்திவிட்டனர். இதனால் தேர்தல் முடிவுகளை எண்ணுவதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இதனிடையே அமெரிக்கா அதிபர் தேர்தலை பொறுத்தவரை ,பாரம்பரியமாக குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்காத மாநிலங்கள் ஸ்விங் மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை கைப்பற்றும் நபரே அதிபர் அரியணையில் ஏற முடியும்.

இந்த சூழலில் முடிவை தீர்மானிக்கும் மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்ஸின் மாநிலங்களில் முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Trump

இந்த வார இறுதியில் தான் முடிவுகள் வெளியாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர். மிச்சிகனில் 16, பென்சில்வேனியாவில் 20, விஸ்கான்ஸினில் 10 என மொத்தம் 46 தேர்வாளர் வாக்குகள் இந்த மூன்று மாநிலங்களில் உள்ளன.

முடிவுகள் வெளியாக தாமதமாகும் என சொல்லப்படுவதால் இந்த 46 வாக்குகளும் யாருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேர்தல் முடிவுகளையே மாற்றும் வகையில் இந்த முடிவுகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

தபால் வாக்குகளை எண்ண கூடுதல் நேரம் தேவைப்படுவதே முடிவுகள் வெளியாக தாமதமாக காரணம் என தெரிகிறது.

இதையும் படிக்கலாமே:  அமெரிக்க அரசியல் கட்சி சின்னத்தின் சுவாரஸ்யமும் பின்னணியும்…

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter