பைடன் செல்ல விரும்பும் இந்திய உணவகம் இதுதானாம்!!

joe biden

அமெரிக்காவின் 46வது அதிபராக கடந்த மாதம் 20 ஆம் தேதி பதவியேற்ற ஜோ பைடன், நாட்டு மக்களிடம் வித்தியாசமான அணுகுமுறையில் நடந்துகொண்டு வருகிறார்.

அமெரிக்கா கொரோனா பெருந்தொற்றிலிருந்து இன்னும் மீளவில்லை. ஊரடங்கால், பல்வேறு மாகாணங்களில் சிறு வியாபாரிகளின் பொருளாதாரம் மிகவும் பதிக்கப்பட்டுள்ளது.

நலிவடைந்த வணிகர்களுக்காக ‘அமெரிக்க மீட்புத் திட்டம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு, அதற்காக 10 பில்லியன் அமெரிக்கா டாலர்களை அந்நாட்டு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

https://www.instagram.com/tv/CLPKc_dAhh7/?utm_source=ig_web_copy_link

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றால் நலிவடைந்துள்ள சிறு வியாபாரிகளை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடியோ கான்பெரன்ஸ் கால் மூலம் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து வருகிறார்.

அந்தவகையில் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரத்தில் நான் ஸ்டாப் என்ற பெயரில் இந்திய உணவகத்தை நடத்தி வரும் நீல், சமீர் எனும் சகோதர்களை வீடியோ கான்பெரன்ஸ் கால் மூலம் சந்தித்த பைடன், அட்லாண்டாவுக்கு வந்தால் உங்கள் கடைக்கு வரலாமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு நான் ஸ்டாப் உணவாக சகோதரர்கள், “கண்டிப்பாக வரலாம்” என்று புன்னகையுடன் கூறினர். நீல், சமீர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஸ்டாப் உணவகத்தை நடத்திவருகின்றனர். ஆனால் கொரோனா பெருந்தொற்றால் 75% சதவீதம் நஷ்டம் ஏற்பட்டதாகவும், பாதி பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியதாகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர் நீல் மற்றும் சமீர்.