உறையும் ரத்தம்: ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாடு நிறுத்தம்

vaccine

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தும் பணி அமெரிக்காவில் தீவிரமாக ஒருபுறம் நடைபெற்றுவந்தாலும் கொரோனா தொற்று பரவலின் வேகம் கட்டுக்குள் வராமல் இருந்தது.

US Regulators Recommend "Pause" On J&J Vaccine Over Rare Blood Clots

இந்த சூழலில்தான் அமெரிக்காவின் பெல்ஜியத்தில் இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டு மருந்து மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. பைசர், மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகளை இரண்டு டோஸ் போட வேண்டும். ஆனால் ஜான்சன் அண்ட் தடுப்பூசியை ஒரே டோஸ் போட்டுக்கொண்டால் போதும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 முதல் 48 வயதிலான ஆறு பெண்களுக்கு ரத்தம் உறைந்து இரத்தக்கட்டிகள் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த தடுப்பூசி பயன்பட்டை நிறுத்துமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும், அமெரிக்க நோய்த்தடுப்பு மையங்களும் தடுப்பூசி முகாம்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. இதனையடுத்து பல்வேறு மாகாணங்களுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் இதுவரை ஏழு மில்லியன் மக்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.