இந்திய பெண்ணுக்கு அமெரிக்காவில் பதவி

Vanita Gupta

அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாக, இந்திய வம்சாவளியான வனிதா குப்தாவை நியமிக்க செனட் சபை ஒப்புத அளித்துள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள பைடனின் நிர்வாக குழுக்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோலோச்சி உள்ளனர்.

அதுமட்டுமின்றி, 55 உயர் பதவிகளுக்கு இந்திய வம்சாவளியினரை நியமித்து அழகு பார்த்தார். அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபராக பொறுப்பேற்கிறார்.

Biden praises Vanita Gupta, says she is 'proud daughter' of immigrants from  IndiaBiden praises Vanita Gupta, says she is 'proud daughter' of immigrants from  IndiaBiden praises Vanita Gupta, says she is 'proud daughter' of immigrants from  India

அமெரிக்க சுகாதார துறையில் நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் விவேக் மூர்த்தி, அதிபரின் மனைவி ஜில் பைடனின் கொள்கைக் குழு இயக்குநர் மாலா அஹிடா உள்ளிட்டோர் உயர் பதவியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வனிதா குப்தா, ஒரு வழக்கறிஞர். ஒபாமா அதிபராக இருந்த சமயத்தில், இவர் உதவி அட்டர்னி ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் தற்போது, பைடனின் அமைச்சரவையில், நீதித் துறையில் மூன்றாவது உயரிய பதவியான, இணை அட்டர்னி ஜெனரலாக வனிதா குப்தாவை நியமிக்கப்பட்டார்.

அவரது நியமனத்தை உறுதி செய்வதற்காக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் சபை வாக்கெடுப்பு நடந்தது.

அதில் 100 உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் வனிதா குப்தா நியமனத்துக்கு, செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்களும், கறுப்பினத்தவர்களும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.