அமெரிக்காவில் காந்தி சிலை மீண்டும் திறப்பு!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மகாத்மா காந்தியின் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை அடையாளம் தெரியாத சிலர் அவமதிப்பு செய்தனர். இதில் சேதமடைந்த சிலையை தூதரக அதிகாரிகள் பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்தனர். போராரட்டக்காரர்கள் காந்தி சிலையை அவமதிப்பு செய்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்தது. சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.


இந்நிலையில் காந்தி சிலை புனரமைக்கப்பட்டு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. வாஷிங்டன் மாகாண துணை செயலர் ஸ்டீபன், இந்திய தூதர் தரண்ஜித் சிங் மற்றும் இரு நாட்டு தூதரக அதிகாரிகள், அமெரிக்கா வாழ் இந்திய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.