அமெரிக்க அதிபருக்கு கொரோனா வந்தா என்னவாகும்? சட்டம் சொல்வது என்ன?

உலக சுகாதார அமைப்பு வலியுறுத்திய நிலையிலும் மாஸ்க் போடாமல் மாஸ் காட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது முகக்கவசம் அணிந்து வலம் வருகிறார்.

trump

ஒருவேளை அதிபர் டிரம்புக்கு கொரோனா வந்தால் அமெரிக்காவில் என்ன நடக்கும்?.
அமெரிக்காவில், அதிபர் பதவி என்பது வானளாவிய அதிகாரமாக பார்க்கப்படுகிறது. அது உண்மையும் கூட. அப்பேர்ப்பட்ட பதவியில் இருக்கும் டிரம்ப்-க்கு கொரோனா தொற்று உறுதியானால் என்னவாகும்?. நோய் தொற்று தென்படாமல் இருந்தால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, டிரம்ப் கவனித்து வந்த பணிகள் அனைத்தும் அவரது மேற்பார்வையில் துணை அதிபர் பென்ஸ் கவனிப்பார். அதே வேளையில், டிரம்ப் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தால், அரசியலமைப்பின் 25 ஆவது திருத்தத்தின்படி துணை அதிபரிடம் பணிகள் ஒப்படைக்கப்படும். பின் அந்த நோயில் இருந்து மீண்டு வந்ததும் அவர் தமது கடமைகளை மீண்டும் கவனித்துக் கொள்ளலாம்.

trump

கடந்த காலங்களில் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் அதிபராக இருந்த போது, இரண்டு முறை மருத்து சிகிச்சை மேற்கொண்ட நிலையில், இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. டிரம்ப் மற்றும் பென்ஸ் இருவரும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், இருவருக்கும் 25ஆவது திருத்தத்தை செயல்படுத்த முடியாது. ஆனால், 1947 ஆம் ஆண்டின் அதிபர் வாரிசு சட்டத்தின்படி, பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி அதிபர் பதவியில் அமர வாய்ப்பு உண்டு. அப்படி இல்லையென்றால் அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகிய இருவரும் செயல்பட இயலாமல் போனால், உடனடியாக நீதிமன்றத்தை நாடி புதிய அதிபர் யார் என்பது முடிவு செய்யப்படும் எனக் கூறுகின்றனர் சட்ட நிபுணர்கள். ஏனென்றால் இரண்டு மணி நேரம் கூட அதிபர் பதவியில் யாரும் இல்லாதிருப்பது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்றும் சொல்லப்படுகிறது.

trump

சட்டதிட்டங்கள் இவ்வாறு இருக்க, அதிபர் ட்ரம்ப்-பும் துணை அதிபர் பென்ஸ்-ம் தற்போது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் இருவருக்குமே இதுவரை கொரோனா இல்லை என்பது குறிப்பிடதக்கது.