தேர்வு முடிவை மாற்றுவாரா ட்ரம்ப்?

Joe biden-Trump

அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில் பல்வேறு வழிகளில் அதிபர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

அமெரிக்கா அதிபரை பொறுத்தவரை 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபராக முடியும்.

வழக்கமாக மக்களின் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் தேர்வாளர்களை நியமிப்பர்.

டிசம்பர் மாதம் 14ஆம் தேதி தேர்வாளர்கள் வாக்களித்து அதிபரை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இந்த முறை என்ன நடக்கும் என்பதை யாராலும் யூகிக்கமுடியவில்லை.

தற்போதைய சூழலில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருதரப்பும் தயாராக உள்ளது.

ஒரு வேளை உச்சநீதிமன்றம் இதில் முடிவெடுக்கும் சூழல் உண்டானால் ட்ரம்புக்கு சாதகமாக தீர்ப்பு வரலாம்.

ஏனெனில் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 6 பேர் பழமைவாதிகள். எனவே 6க்கு 3 என்ற விகிதத்தில் தீர்ப்பு கிடைக்கலாம்.

ட்ரம்ப் தரப்பு கேட்பதை போல வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படலாம் அல்லது மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படலாம்.

ஒரு வேளை இரு வேட்பாளர்களுமே 269 என்ற எண்ணிக்கையை பெற்றால் அதிபரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிரதிநிதிகள் சபைக்கும் துணை அதிபரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு செனட் அவைக்கும் வழங்கப்படும்.

மொத்தமுள்ள 50 மாநிலங்களுக்கும், பிரதிநிதிகள் சபை சார்பாக 50 குழுக்கள் நியமிக்கப்படும்.

இதில் 26 குழுக்களின் ஆதரவை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி நற்பகலுடன் ட்ரம்பின் பதவிக்காலம் முடிகிறது.

அதற்குள் புதிய அதிபரோ அல்லது துணை அதிபரோ தேர்வு செய்யப்படவில்லை எனில், பிரதிநிதிகள் சபையின் அவை தலைவர் அதிபர் பொறுப்புக்கு வரலாம்.

அவர் அந்த பொறுப்பை ஏற்க முடியவில்லை எனில் ஆளும் கட்சியின் மூத்த செனட் சபை உறுப்பினர் அதிபர் பதவிக்கு வரலாம்.

இதையும் படிக்கலாமே:  அமெரிக்காவின் நாடித்துடிப்பு ஜனநாயகம்தான் என்பது நிரூபணமாகியுள்ளது: ஜோ பைடன்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

 

Twitter