அடுத்த அதிபர் யார்? பிரபல இந்திய ஜோதிடர் கணிப்பு…

Shankar Charan

அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்த அதிபராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதான ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வருவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.

கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் சங்கர் சரண் திரிபாதி அதிபர் ட்ரம்ப்பின் ஜாதகத்தை ஆய்வு செய்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் அதிகபட்சமாக 9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று வெற்றி பெற்று மீண்டும் அரியணை ஏறுவார் என கணித்துள்ளார்.

அனைத்து கிரகங்களும் ட்ரம்புக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்துள்ள அவர், ட்ரம்ப் நேர்மையாக வெற்றிப் பெற்றாலும் அவர் வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் என்றும் ஜோதிடர் திரிபாதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே:  அதிபர் ட்ரம்புக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கும் சிலைகள்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter