இந்திய அமெரிக்க சிறுமிக்கு இளம் விஞ்ஞானி பட்டம்

Anika Chebrolu

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன.

கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 84 லட்சத்து 59ஆயிரத்தும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது.

அமெரிக்காவில் நாள்தொறும் சுமார் 70 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறக்கின்றனர்.

Anika Chebrolu,

இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு வலுவான சிகிச்சை முறையை கண்டுபிடிப்பதற்கான இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் 14 வயதான இந்திய அமெரிக்கா சிறுமி வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் மினிசோட்டாவில் 3எம் நிறுவனம் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் டெக்சாஸை சேர்ந்த 14 வயதான இந்திய அமெரிக்கா சிறுமி அனிகா செப்ரோலு, கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வைரஸின் புரதத்தை கட்டுப்படுத்துவதற்கான மூலக்கூறை உருவாக்குவதற்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி முறையை உருவாக்கினார். இவருக்கு முதல் பரிசு அளித்த 3எம் நிறுவனம், 18 லட்சம் ரூபாய் பரிசு தொகையை வழங்கி ஊக்குவித்துள்ளது.

.இதுகுறித்து அனிகா சி.என்.என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “என்னுடைய ப்ராஜெக்ட் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பானது என்பதை தெரிந்தவுடன் கடந்த இரண்டு தினங்களாக ஊடகங்கள் இதன் மீது கவனம் செலுத்தின. நானும், உலக மக்கள் அனைவரும் விரும்புவதை போல் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவோம்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே:  கருத்துக்கணிப்புகள் பொய்யாகுமா? ட்ரம்ப் மீண்டும் அதிபரா?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter