அமெரிக்கவாழ் இந்தியர்களின் வாக்கு எனக்குதான்: ட்ரம்ப் நம்பிக்கை

Trump- Modi

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார்.

ஆனால் அமெரிக்க இந்தியர்கள் ஜோ பிடனுக்கு வாக்களிக்கப்போகிறார்களா? அல்லது அதிபர் ட்ரம்பிற்கே மீண்டும் வாக்களிக்கப்போகிறார்களா? என்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் எனக்கூறப்படும் நிலையில் அதிபர் ட்ரம்பும், ஜோ பிடனும் இந்தியர்களின் வாக்கை குறி வைத்தே பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், “தனக்கு இந்தியா மற்றும் பிரதமர் மோடியின் ஆதரவு அதிகமாக உள்ளது. எனவே அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு எனக்குதான்.

பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். பெரிய தலைவர். அவர் சிறப்பாக பணி செய்கிறார். மோடி போல் சிறப்பாக பணியாற்றுவது மிக சாதாரண விஷயம் அல்ல” எனக் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அவரது இந்திய பயணத்தை சுட்டிக்காட்டிய ட்ரம்ப், மிக உன்னதமான மற்றும் பெரிய நாடு இந்தியா என புகழாரம் சூட்டினார்.

இந்தியாவில் நம்ப முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்ததாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். மேலும் என்னைப்போலவே எனது மகள் இவாங்காவும் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரும் இந்தியாவை பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பர் என்றும் ட்ரம்ப் இந்தியர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக புகழ்ந்து பேசினார்.

இதையும் படிக்கலாமே: அதிபர் தேர்தலில் 2 முறை வாக்களிக்க முயற்சி செய்யுங்கள்: ட்ரம்ப்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa