அமெரிக்காவில் காந்தி சிலை அவமதிப்பு

Mahatma Gandhi

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள காந்தி சிலை காலிஸ்தான் பயங்கரவாதிகளால் அவமதிக்கப்பட்டது.

செப்டம்பர் மாதம் இந்திய அரசு புதிதாக மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இது தங்களின் விளைப்பொருட்களை விற்பனை செய்ய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகள் கடந்த 14 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் இந்திய அரசு அவர்களின் போராட்டத்துக்கு செவி சாய்க்கவில்லை.

6 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் மத்திய அரசுடனான விவசாயிகளின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், போராட்டம், ரயில் மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இரண்டு வாரமாக அமைதியாக போராடிவரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு கனடா மற்றும் பிரிட்டன் அரசுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த சிலரும், அமைதியாகப் போராட இந்திய விவசாயிகளுக்கு உரிமையுண்டு என கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அருகே விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்க இந்தியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திரண்டவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

Mahatma Gandhi statue defaced in Washington by Khalistan supporters in protest against farm laws

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், அமெரிக்காவிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது காலிஸ்தான் பயங்கரவாதிகள், இந்திய தூதரகத்தில் உள்ள காந்தி சிலையின் தலையில், காலிஸ்தான் கொடியை தூக்கி வீசி அவமதித்தனர்.

உலகம் முழுவதும் மதிக்கப்படும் தலைவரை அவமதிப்பு செய்ததற்கு வாஷிங்டன் இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாமே: ட்ரம்பை பழிவாங்கிய ஃபைசர் நிறுவனம்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter