அமெரிக்காவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 2,000 பேர் பலி!

coronavirus

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Coronavirus
Image: AFP

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 46 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,68,262 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று ஒரேநாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு இதுவரை ஒரு கோடி 31 லட்சத்து 39 ஆயிரத்து 882 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 78 லட்சத்து 8 ஆயிரம் 59 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு தற்போது 50 லட்சத்து 63 ஆயிரத்து 561 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அவா்களில் 24,150 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள்தாக கான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கனக்டிகட், மிசிகன், நியூ ஜெர்சி, ஒஹியோ உள்ளிட்ட 7 மாகாணங்களில் உயிரிழப்புகள் 2 மடங்காகியுள்ளன. மேலும் புளோரிடா, டெக்சாஸ், கலிபோர்னியா ஆகிய மாகாணத்திலேயே பாதிப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: பைடனிடம் அதிகார பொறுப்பை வழங்க ட்ரம்ப் சம்மதம்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter