அமெரிக்காவின் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 மடங்கு அதிகம்! ஆய்வில் பகீர் தகவல்

Corona Patients

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில் 63 லட்சத்து 80 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

coronavirus

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையைவிட மூன்று முதல் 20 மடங்கு அதிகமாகவே இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் மற்றும் உயிரியக்கவியல் பிரிவின் சீன் வு தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் Nature இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்து மதிப்பிடுகிறது என்றும், சோதனைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாவது அமெரிக்காவில் அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றை ட்ரம்ப் தலைமையிலான அரசு முறையாக கையாளாமல் தேர்தல் பரப்புரையில் ஆர்வம் காட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிக்கலாமே: ரகசிய அணு ஆயுதத்தை உருவாக்கி உள்ளேன்: அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

Twitter