ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நாட்டுப்புற நிகழ்ச்சி! 10 ஆம் தேதி 10 மணிக்கு!!

ஹூஸ்டன் பல்கலைக்கழக்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.42 கோடி தேவைப்படுகிறது. இதில் ரூ.21 கோடியை அமெரிக்க அரசு தரும் நிலையில், தமிழர்கள் சார்பில் ரூ.21 கோடி அளிக்க வேண்டும்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பன்முக கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும், அவர்களின் குழந்தைகள் அமெரிக்கப் பல்கலை.யில் படித்தாலும், செழுமை மிக்க தமிழ் கலாச்சாரம், மொழி, இலக்கியம் ஆகியவற்றை அமெரிக்க மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை.

இதற்கு உதவி செய்யுமாறு ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு தமிழர்களையும், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு தனது பேஸ்புக் பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம் அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை தொடங்கப்பட்டுள்ளது.

நமது தமிழ் மொழியின் கலாச்சாரம் மற்றும் வாணிப திறன்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கான கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த இருக்கை தொடங்கப்பட்டுள்ளது

ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கான அமைப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலை கழகத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்கும் மற்றும் நலிந்த கலைஞர்களுக்கும் கிராமப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த இருக்கை விரைவில் அமைந்தால் மேலும் பல நாட்டுப்புற கலைஞர்கள் மாணவர்கள் பயன் அடைவார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இந்த இருக்கை வரும் அக்டோபர் மாதம் பத்தாம் தேதி இணைய வழியில் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த ஒரு நல்ல முயற்சிக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிதியளிப்பதற்கான இணையம் https://houstontamilchair.org இது தொடர்பான தகவல்களை மேலும் நீங்கள் பெறலாம். நான் நிதி அளித்துள்ளேன் நீங்களும் தாராளமாக நிதியளிக்க முன் வாருங்கள்..
தமிழே அழகு தமிழே நிறைவு!! இயன்றதை தந்து இருக்கை அமைப்போம். மிக்க நன்றி!!!” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கைக்கான நிதியை திரட்டுவதற்காக சூப்பர் சிங்கர் புகழ் பெற்ற நாட்டுப்புற கலைஞர்களான செந்தில் கணேஷ்- ராஜலெட்சுமியின் இன்னிசை நிகழ்ச்சி இணையம் வழியே வந்து செவிகளை இனிமையாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 10 ஆம் தேதி அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்கலாம்.

இதையும் படிக்கலாமே:  சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter