அலாஸ்காவில் கொடூரமாக விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்!

Helicopter Crash

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே ஒருபக்கம் பனிப்புயலும், மறுபுறம் சூறாவளி, மழை, வெள்ளமும் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் அன்க்ரோஜ் என்ற இடத்தில் ஹெலிகாப்டரில் சிலர் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது நிக்கிளேசியர் பகுதியில் ஹெலிகாப்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காற்றின் வேகம் மற்றும் பனிமூட்டம் காரணமாக திசை மாறிய அந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து நிக் என்ற பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் படுகாயமடைந்தனர்.

தகலவறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அலாஸ்கா மாகாண மீட்பு குழுவினர், உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

விபத்தை தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிக்கு விமான போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட ஒரு பயணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து அலாஸ்கா மாகாண காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.