ஹெச் 1பி விசா பெறுவோரின் வாழ்க்கை துணைகளுக்கு பணி அங்கீகார காலத்தை நீட்டிக்க கோரிக்கை!

visa

அமெரிக்காவில் வெளிநாட்டவா்கள் தங்கி பணிபுரிவதற்கு வழங்கப்படும் ஹெச்1பி விசா மீது ட்ரம்ப் நிர்வாகம் விதிக்க முயன்ற முக்கிய இரு கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளது.

H1-B visa suspension to have Rs 1,200-cr impact on Indian IT firms: Crisil

ஐடி உள்ளிட்ட பல துறைகளில் வெளிநாட்டவர்கள் வந்து தற்காலிகமாக பணியாற்றுவதற்காக அமெரிக்க அரசு ஹெச்1பி, ஹெச்2 பி, எல்1 உள்ளிட்ட விசாக்களை வழங்குகிறது. இவற்றில் ஹெச்1பி விசா இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் பிரபலமானது.

குறிப்பிட்ட துறையில் மிகவும் திறமை வாய்ந்த வெளிநாடுகளை சேர்ந்த நபர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது.

அதாவது ஊதிய நிலை மற்றும் திறமை என இரண்டையும் கவனத்தில் கொண்டே இந்த விசா வழங்கப்படுகிறது.

இதனை பயன்படுத்தி தான் இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஐடி ஊழியர்கள் அமெரிக்கா சென்று பணியாற்றுகின்றனர்.

அமெரிக்காவில் ஹெச்1பி விசா பெற்றுள்ள 13 லட்சம் பேரில் 8 லட்சம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

ஹெச்1பி விசா பெற்று பணியாற்றுபவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு ஹெச் 4 விசாக்களுடன் வேலை வழங்கப்பட்டுவந்தார். அமெரிக்கர்களின் நலனை கருத்தில்கொண்டு ஹெச்1பி விசாக்களையும் ஹெச்4 விசாக்களையும் இந்த ஆண்டு இறுதிவரை விநியோகிக்க தடை விதித்து அதிபர் டொனால்டு டிரம்ப் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் அமெரிக்காவின்ஹெச்1 பி விசா பெறுவோரின் வாழ்க்கை துணைகளுக்கு பணி அங்கீகார காலத்தை நீட்டிக்கக்கோரி அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனுக்கு 60 எம்பிக்கள் கடிதம் எழுதினர். அந்த கடிதத்தில், ஹெச் 4 விசாவுடன் பணியாற்றுவோரின் பணி அங்கீகார ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மேலும் நீட்டிக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளி எம்.பி.க்களான அமி பெரா ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட எம்.பி.க்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

இதையும் படிக்கலாமே: மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் அமெரிக்கா!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter