பைடனுக்கு இடையூறு செய்யும் ட்ரம்ப்

Joe biden-Trump

அதிகார மாற்றத்திற்கு ட்ரம்ப் தரப்பினர் இடையூறு செய்வதாக புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுப்படி செய்யப்பட்டன.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருந்துவருகிறார்.

ட்ரம்பிடம் இருக்கும் அதிகாரங்களை ஜோ பைடனுக்கு மாற்றுவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், ட்ரம்ப் ஒப்புதல் அளிக்காததால் அவை மேற்கொண்டு நடைபெறவில்லை.

trump- biden

இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், “சில துறைகளில் அதிகார மாற்றம் எளிதாக நிகழ்கிறது. ஆனால் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கியமான துறைகளில் அதிகாரம் மாற்றம் செய்ய ட்ரம்ப் தரப்பினர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான விவரங்களில் முழு தகவலையும் அளிக்க ட்ரம்ப் மறுக்கிறார். வெளியுறவு கொள்கை மற்றும் பாதிகாப்புத்துறை ஆகியவற்றை முற்றுலும் கட்டமைக்க வேண்டும். இது சவாலான விஷயம். சீனாவுக்கு எதிராக ஒத்த கருத்துடைய நாடுகளுடன் கூட்டணி உருவாக்கப்படும்” எனக் கூறினார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவிலுள்ள போஸ்ட் ஆபிஸ்க்கு சூட்டப்படும் இந்தியர் பெயர்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter