ஜூலை 4இல் கொரோனாவிடம் இருந்து அமெரிக்கா சுதந்திரம் பெறும்- பைடன்

Joe biden

கொரோனா வைரஸ் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினத்துடன் ஓராண்டு நிறைவடைந்தது.

இதனை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதல் முறையாக தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

Biden

அப்போது பேசிய அவர், “மே 1ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்,

ஜூலை 4 ஆம் தேதி கொரோனாவிடம் இருந்து அமெரிக்கா சுதந்திரம் பெறும். இந்த சுதந்திர தினம் உண்மையிலேயே சிறப்பானதாக இருக்கும்.

மக்கள் ஒத்துழைப்பு கொடுத்த குடும்பத்தினருடன் அனைவரும் சிறப்பான சுதந்திர தினத்தை கொண்டாடலாம்.

இந்த ஆண்டு கொடிய வைரசிடம் இருந்து சுதந்திரம் அடையவிருக்கிறோம். எனது பதவிக்காலத்தின் முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த இலக்கை 60-வது நாளிலேயே அடைவோம்.

அமெரிக்காவில் உலகப்போர்களில் ஏற்பட்ட உயிரிழப்பைவிட கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையே அதிகம்.

கொரோனா பரவ தொடங்கியபோது அதனை தடுக்க நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன் விளைவு தொற்று பரவல், உயிர்ப்பலிகள், மன அழுத்தம், தனிமை. ம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இழப்பை சந்தித்துள்ளோம்.

வாழ்வாதாரம் தொலைந்து உயிர் பலிகளை நிறைய எடுத்துக்கொண்ட ஆண்டாக 2020 அமைந்து விட்டது. அமெரிக்கா எப்போதுமே இருளில் ஒளியைத் தேடும் உத்வேகம் கொண்ட நாடு” எனக் கூறினார்.