அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகிறார் பைடன்

biden inauguration

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பதவியேற்றுக் கொள்கிறார்.

அமெரிக்காவின் அரசமைப்பை பாதுகாப்பதில் என்னால் ஆன அனைத்து சிறப்பான முயற்சிகளையும் எடுப்பேன்… அதிபர் பதவிக்கு உண்டான நேர்மையுடன், உண்மையாக பணியாற்றுவேன் என உறுதி கூறுகிறேன்… என ஜோ பைடன் பிரமாணம் எடுத்ததும், அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகி விடுவார்..

அவரைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றுக் கொள்வார். இந்த பதவியேற்பு விழா அமெரிக்காவின் பாரம்பரிய முறைப்படி வாஷிங்டன் டிசியில் நடக்கிறது.

பதவியேற்பு விழா முடிந்த அடுத்த நாள் பைடன் வெள்ளை மாளிகையில் குடியேறுவார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு வெள்ளை மாளிகை தான் அவரது வீடாகவும், அலுவலகமாகவும் இயங்கும்.

Biden Inauguration Day 2021: Time, TV schedule, channel, livestream | How  to watch Joe Biden become president - syracuse.com

அமெரிக்க அதிபருக்கான பதவியேற்பு விழா என்றாலே பாதுகாப்பு பலமாக இருக்கும். அதுவும் கடந்த 6 ஆம் தேதி நாடாளுமன்றத்திற்குள் புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், இம்முறை, பாதுகாப்பு விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

விழா நடக்கும் வாஷிங்டன் டி.சி நகரின் பெரும்பாலான பகுதிகள் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் ரகசிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 15 ஆயிரம் தேசிய துருப்புகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

பதவியேற்பு விழாவில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக முழு வாஷிங்டன் நகரிலும், ஏற்கெனவே அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறுபவரும், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார். ஆனால், இம்முறை அந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ட்ரம்ப். பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்திருக்கும் ட்ரம்ப், அன்றைய நாளில், ஃபுளோரிடாவில் உள்ள தனது இல்லத்திற்கு செல்லப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

அதே நேரம் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அன்றைய நாளில் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தப்போவதாக, ஆதரவாளர்கள் 68 ஆயிரம் பேர் அறிவித்துள்ளனர்.

எது எப்படியோ… பதவியேற்பு விழா அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் அமைதியாக நடக்க வேண்டும் என்பது தான் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் கவலையாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: கேலி, கிண்டல்களை கடந்து வந்த பைடன்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter