அதிபர் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்த ட்ரம்ப்!! வெளியானது புதிய கருத்துக்கணிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு ட்ரம்பை விட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் இவ்வருடக் கடைசியில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ளது. கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.


ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மற்றும் Ipsos நடத்திய கருத்துக் கணிப்புகளில் இவை தெரியவந்திருக்கின்றது. இதுவரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 46 சதவிகிதம் பேர் ஜோ பிடெனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். டொனால்டு ட்ரம்ப்புக்கு 38 சதவிகிதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர். யாருக்கு வாக்களிப்பது என இதுவரை முடிவு செய்யாத வாக்காளர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியில், 61 சதவிகிதம் பேர் ஜோ பிடெனுக்கும், 39 சதவிகிதம் பேர் டொனால்டு ட்ரம்ப்புக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அந்த தரப்பினரில் 70 சதவிகிதம் பேர், ட்ரம்ப்பின் செயல்பாடுகளில் திருப்தியில்லை எனவும் கூறியுள்ளனர். கருத்துக்கணிப்புகளின் படி ட்ரம்ப்பைவிட ஜோ பிடெனுக்கு 8 சதவிகிதம் ஆதரவு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa