பைடன் நிர்வாகத்தில் மேலும் ஒரு இந்தியருக்கு முக்கிய பொறுப்பு

vedant patel

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.

JOE BIDEN SELECTS VEDANT PATEL TO BE THE ASSISTANT WHITE HOUSE PRESS  SECRETARY-Industry Global News24

பல்வேறு தரப்பினரின் அறிவுரைக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை பைடனிடம் வழங்க ட்ரம்ப் சம்மதித்தார். அதனால், ஜோ பைடன் அமைத்த அதிகார பரிமாற்ற குழுக்கள் முழு வீச்சில் தங்கள் பணிகளைச் செய்து வருகின்றன. அவற்றில் 20 பேர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர்கள்.
அதுமட்டுமின்றி, வெள்ளை மாளிகையின் மிகவும் அதிகார மிக்க பதவியான பட்ஜெட் துறை தலைவராக இந்திய வம்சாவளியினரான நீரா தாண்டனுக்கு பைடன் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்புத் துறை உதவிசெயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேதாந்த் படேல் என்பவரை தேர்ந்தெடுத்துள்ளார். வேதாந்த் குஜராத் மாநிலத்தில் பிறந்து கலிஃபோர்னியாவில் வளர்ந்தவர் ஆவார்.

இவர் கலிபோர்னியா-ரிவர்சைடு பல்கலைக்கழகம் மற்றும் புளோரிடா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்ற பட்டதாரி ஆவார்.

இதையும் படிக்கலாமே: தடுப்பூசி போட்ட செவிலியர் திடீரென மயங்கிவிழுந்தார்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter