காட்டுத்தீயால் கறுகும் கலிபோர்னியா; 27 பேர் பலி

california wildfires 2020

கொரோனா வைரஸுடன் போராடி கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு காட்டுத்தீ மேலும் துன்பத்தை கொடுத்துள்ளது.

அமெரிக்க‌வி‌ன கலிபோர்னி‌‌‌‌யா மா‌கா‌‌ணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில்‌ கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக எரிந்துவரும் காட்டுத் தீ, தற்போது ஒரேகான் மற்றும் வாஷிங்டன் பகுதிகளுக்கும் பரவியுள்ளது. ஒரேகான் மாகாணத்தில் உள்ள மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் தீ பரவி வரும் பகுதியிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் காட்டுத்தீக்கு இரையானதால் குடியிருப்பு பகுதிகள்‌‌‌ வெறிச்சோடி காணப்படுகின்றன.

california wildfires 2020

கலிபோர்னியா மாகாணத்தில் 25க்கும் அதிகமான இடங்களில் தீ பரவியதால் அணைக்க முடியாமல் அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் போராடி வருகின்றனர். காட்டுத்தீயால் ஒரு புறம் ஆரஞ்சு நிற வானத்தை பார்க்க முடிவதாகவும், மறுபுறம் இருளில் இருப்பது போன்ற உணர்வும் இருப்பதாக கூறுகின்றனர் கலிபோர்னியா மக்கள். ஒரு மாதத்திற்கு மேலாக எரியும் காட்டுத்தீயால் இதுவரை 23 லட்சம் ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. தீயில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது தீயில் கருகி 10க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீயால் மக்களுக்கு இன்னல்களும் சேதங்களும் ஒரு புறம் என்றால் மறுபுறம் காற்றுமாசு. சுமார் 14 ஆயிரம் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். காட்டுத்தீயில் சிக்கிய விலங்குகள் செய்வதறியாது அங்கும் இங்கும் சுற்றி அலையும் காட்சிகள் மனதை ரணமாக்குவதாக தீயணைப்புத்துறை வீரர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். 55 டிகிரி செல்சியஸ் அதாவது 131 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ளதால் தீயை அணைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், தீ வேகமாக பரவுவதாகவும் அம்மாகாண அரசு விளக்கமளித்துள்ளது.

இதையும் படிக்கலாமே: வரலாற்றில் இன்று! அமெரிக்க வல்லரசை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்

FB Page
– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa