மயக்கமடைந்த பாட்டியை தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய சிறுவன்!

11 years old

அமெரிக்காவில் உடல்நலக்குறைவால் மயமடைந்த பாட்டியை தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இண்டியானாபோலிஸ் நகரைச் சேர்ந்த சிறுவன் பிஜே பிருவர் லே. 11 வயதான இவன் தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த அவரது பாட்டி ஏஞ்ஜெலா பிருவர் லே திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்தவுடன் பதற்றமடையாத அந்த சிறுவன், தன் வீட்டிலுள்ள மெர்சிடெஸ் பென்ஜ் காரை எடுத்து வந்து அதில் பாட்டியை ஏற்றிக்கொண்டு தானே காரை ஓட்டியபடி பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதன்பின் பாட்டிக்கு முதலுதவி செய்துள்ளான். ஏஞ்ஜெலாவுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

11 years old

இதுகுறித்து ஏஞ்ஜெலா கூறுகையில், “நான் தடுமாறியபோது, என் பேரன் கார் ஓட்டிவருவதை பார்த்து ஆச்சர்யமடைந்தேன். இருப்பினும் பேரனை நம்பி காரில் ஏறி வீட்டிற்கு வந்தடைந்தேன். பிஜ் செய்த முதலுதவியாலேயே உயிர் பிழைத்தேன். தன் பேரனின் சமயோஜிதம் மற்றும் சாமர்த்தியத்தை முகநூலில் பதிவு செய்துள்ளேன்” எனக் கூறினார். இந்த பதிவை பார்த்த ஏராளமானோர், சிறுவன் பிஜே பிருவர் லேவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.

 

இதையும் படிக்கலாமே: உலகிலேயே இந்திய பெண்கள் தான் கவர்ச்சியற்றவர்கள் – அமெரிக்க முன்னாள் அதிபர்

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa