ட்ரம்ப் உயிருக்கே ஆபத்து! நீதிமன்றம் அதிர்ச்சி தகவல்

Pascale-Ferrier

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக நியூயார்க் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அதிபர் ட்ரம்ப்புக்கு வெள்ளை மாளிகை முகவரியில் ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் செப்டம்பர் 18 ஆம் தேதி வந்தது. வழக்கமான சோதனையின்போது கடிதத்தில் விஷம் தடவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கடிதம் வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கு முன்பே உளவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த கடிதம் எங்கிருந்து வந்தது? யார் அனுப்பினார் என்பது குறித்து உளவுத்துறை விசாரணை நடத்தியது. விசாரணையில் அந்த கடிதம் கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதிபர் ட்ரம்பை குறி வைத்து கடிதம் அனுப்பப்பட்டதா என விசாரணை நடைபெற்றது. விசாரணையில் உளவுத்துறை கனடாவை சேர்ந்த பெண் ஒருவரே கடிதம் எழுதி அனுப்பியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெறும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Pascale- Ferrier
Image: voanews

இந்நிலையில் சம்பந்தபட்ட பெண்ணுடன் தொடர்புடைய நபர்கள் குறித்து கனடா அதிகாரிகள் உதவியுடன் அமெரிக்க அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கனடாவை சேர்ந்த பஸ்கேல் சிசில் வெரோனிக் பெரியர் என்ற 53 வயது பெண் ட்ரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 20ஆம் தேதியன்று கனடா-அமெரிக்கா எல்லையில் பஸ்கேல் சிசில் வெரோனிக் பெரியர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிபர் ட்ரம்ப் உயிரிக்கு ஆபத்து இருப்பதால் பஸ்கேல் சிசிலை தொடர்ந்து காவலில் வைக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது. சிசிலிடமிருந்த துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி கென்னெத் ஸ்க்ரோடெர், “ஆப்ரகாம் லிங்கன் முதல் வில்லியம் மெக்கின்லி, ரொனால்ட் ரீகன் வரை அமெரிக்காவின் முந்தைய அதிபர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதையும், கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் இந்த நாடே பார்த்திருக்கிறது. எனவே தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் பல்வேறு கொலை அச்சுறுத்தல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் 6 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter