அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனத்தை உளவு பார்த்த சீனா!

கொராவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனத்தை சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய ஹேக்கர்கள் உளவு பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பெருந்தொற்றால் உலகமே சிக்கி தவித்துவரும் நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சுமார் 120 முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் பயோடெக்னாலஜி நிறுவனமான மாடெர்னா உருவாக்கிய தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை தொடங்கியிருப்பதாகவும், இந்த சோதனையில் 10,000 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமெரிக்க தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

hackers

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக மாடெர்னா கடந்த ஜனவரி மாதம் முதலே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அடையாளங்களை வெளியில் சொல்ல இயலாத தங்கள் மூன்று முக்கிய நிறுவனங்களை, இரண்டு சீனர்கள் உளவு பார்த்த்தாகவும், முக்கிய தகவல்களை திருட முயன்றதாகவும் அமெரிக்க நீதித்துறை கடந்த வாரம் பொதுவெளியில் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மாடெர்னா ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், சீனா தகவல்களை உளவு பார்த்தது உண்மை தான் என கூறியுள்ளார். இருப்பினும் தகவல்கள் திருடப்படுவதை தடுக்க விழிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், முக்கிய தகவல்களை கவனமாக கையாண்டு வருவதாகவும் மாடெர்னா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: அதிபர் தேர்தலை ஏன் தள்ளி போட கூடாது? – ட்ரம்ப்