கொரோனா பாதித்து குணமடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போதும்!

One Dose Vaccine

கொரோனா பாதித்து குணமடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போதும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்கா இரண்டாவது நீடிக்கிறது. அங்கு 31.7 மில்லியன் பேருக்கு கொரோனா பாதித்து உள்ளது.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு குறைந்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனாவால் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே இருக்கிறது.

குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவது வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.

ஃபுளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மக்கள் முகக்கவசம் அணிய மறுப்பது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளே பெருமளவில் வைரஸ் பரவ காரணமாக சொல்லப்படுகிறது.

கொரோனாவின் இரண்டாம் அலை அமெரிக்காவை ஆட்டிப்படைத்துவரும் நிலையில், நிலைமை இப்படியே நீடித்தால் நாளொன்றுக்கு 2 லட்சம் பேர் பாதிப்பு என்ற உச்சமும் எட்டப்படலாம் என்ற கணிப்புகள் வெளியாகியுள்ளன.

விரைவாக பொதுமுடக்கத்தை தளர்த்தியது தான் இத்தனை வேகமாக வைரஸ் பரவ காரணம் என சொல்லப்படுகிறது.

எனவே பல்வேறு மாகாணங்களிலும் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

Covid Survivors May Need Just One Shot Of 2-Dose Vaccines, Say Studies

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போதுமானது என அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள cedars sinai மருத்துவ மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பாதித்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் மூலம் உருவான எதிர்பாற்றலும் கொரோனா வைரஸ் பாதிக்காதவர்களுக்கு 2 டோஸ்கள் மூலம் உருவான எதிர்பாற்றலும் சமமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே கொரோனா பாதித்து மீண்டவர்கள் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு அறிவித்தப்பட்டுள்ளது.