அமெரிக்காவில் காய்கறி சாலட்டுகளை சாப்பிட்ட 600 பேருக்கு பாதிப்பு!

அமெரிக்காவில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த காய்கறி சாலட்டுகளை சாப்பிட்ட 600க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள Fresh Express என்ற நிறுவனத்தின் தயாரிப்பு கூடத்தில் காய்கறி சாலட்டுகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. காரட் உள்ளிட்ட காய்கறிகளாலான இந்த சாலட்டுகளை சாப்பிட்ட 641 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சைக்ளோஸ்போரா எனப்படும் ஒட்டுண்ணியால் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இந்த ஒட்டுண்ணி பாதித்த உணவு பொருட்களை சாப்பிட்டால் ஒரு மாதத்திற்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

salad

இதனையடுத்து பாக்கெட் சாலட் வகைகளை விற்க அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுத்துறை தடை செய்துள்ளது. சம்பந்தப்பட்ட சாலட் பாக்கெட்டுகளும் திரும்ப பெறப்பட்டன.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…
Facebook : https://www.facebook.com/tamilmicsetusa
Twitter : https://twitter.com/tamilmicsetusa