அமெரிக்காவில் இந்திய சிறுமி படைத்த சாதனை

Baby Kiara'

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியான கியாரா என்ற ஐந்து வயது சிறுமி ஏஷியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

பேபி கியாரா, லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்திலும், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் தனது சாதனையை பதிவு செய்துள்ளார்.

பிப்ரவரி 13 ஆம் தேதி 4 வயதில் 105 நிமிடங்களில் இடைவிடாத 36 புத்தகங்களை 105 நிமிடங்களில் படித்து சாதனை படைத்துள்ளார்.

இடையில் சிறிது நேரம்கூட ஓய்வு எடுக்கவில்லை. அதிவேகமாக ஆங்கில வரிகளை படித்தாலும் புத்தகத்தின் கருத்தை கியாரா மனதில் ஏற்றிக்கொள்வார் என அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

Indian-American, 5, Reads 36 Books Nonstop In 105 Minutes, Sets Record

ஐந்து வயதில் இந்த அளவு வேகத்தில் ஒரு புத்தகத்தை வாய்விட்டு படித்து முடிக்க முடியுமா என வாய்ப்பிளக்க வைக்கிறார் கியாரா.

இவரது பெற்றோர் ஏஷியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனைக்கு இவரது பெயரை விண்ணப்பித்தனர். அப்போது நூற்றி ஐந்து நிமிடங்களில் இவர் 36 புத்தகங்களை முழுவதுமாக வாய்விட்டுப் படித்து சாதனை படைத்துள்ளார்.

இவரது படிக்கும் பழக்கம் ஊரடங்கில் அதிகரித்ததாகவும், கியாராவின் தாத்தா நல்ல புத்தக வாசிப்பாளர் அந்த பழக்கம் இவருக்கும் வந்திருப்பதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

9jab7hog

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கியாரா, “புத்தகத்தில் வண்ணமயமான படங்களை நான் காண விரும்புவதால் நான் படிக்க விரும்புகிறேன்.

மேலும் அவை பெரியதாக எழுதப்பட்டுள்ளன, எனவே வார்த்தைகளை எளிதில் படிக்க முடியும்.

ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட், சிண்ட்ரெல்லா, லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் மற்றும் ஷூட்டிங் ஸ்டார் ஆகிய புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்” எனக் கூறினார்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கியாரா சுமார் இருநூறு புத்தகங்களைப் படித்திருக்கிறார். காரில், ஓய்வு அறையில், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் கூட கியாரா படித்துக்கொண்டே தான் இருப்பாளாம்.