ட்ரம்ப் நிரபராதி! பதவி நீக்க தீர்மானம் தோல்வி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்த ட்ரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அடம் பிடித்து வந்தார். இந்த சூழலில் கடந்த மாதம் 6 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ட்ரம்ப்பின் ஆதரவாளா்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனா். நாடாளுமன்ற கலவரத்தை தூண்டியதாக ட்ரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை அந்நாட்டு நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை கடந்த மாதம் 13 ஆம் தேதி நிறைவேற்றியது.

ட்ரம்பை தகுதி நீக்கம் செய்வதன் மூலம் இனி அவர் அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாமல் செய்ய முடியும் என்பதால் ஜனநாயகக் கட்சியினர் இந்தப் பதவி நீக்க தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணமாக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட கண்டன தீர்மான வழக்கில் இருந்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆம் தேதி தொடங்கி விசாரணை தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்றது.

விசாரணைக்குப் பிறகு செனட் சபையின் வாக்கெடுப்பில் 57 பேரின் ஆதரவைப் பெற்று டிரம்ப் விடுவிக்கப்பட்டார். எதிரணிக்கு 43 வாக்குகள் பதிவாகின. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அமெரிக்க வரலாற்றில் ஒரு அதிபருக்கு எதிராக இப்படி ஒரு சூன்ய வேட்டை நடந்தது இல்லை எனக் கூறினார்.