ஜி20 மாநாட்டை புறக்கணித்துவிட்டு கோல்ஃப் விளையாட சென்ற ட்ரம்ப்!

trump

ஜி20 நாடுகள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனா குறித்த ஆலோசனையில் பங்கேற்காது அதைப் புறக்கணித்து, மைதானத்தில் கோல்ப் விளையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

15-வது ஜி20 நாடுகள் மாநாட்டை இந்த முறை சவுதி அரேபியா நடத்துகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மாநாடு காணொலி வாயிலாக நடக்கிறது.

மாநாடு தொடங்கியபோது, அதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் ட்ரம்ப்பும் பங்கேற்றார்.

13 நிமிடங்கள் மட்டுமே தொடர்பில் இருந்த ட்ரம்ப் தொடர்ந்து காணொலியில் நடைபெற்ற மாநாட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறியதாக கூறப்படுகிறது.

Donald Trump

அதன்பின் கொரோனா வைரஸ் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து உலக தலைவர்கள் பேசிக்கொண்டிக்கும்போது ட்ரம்ப் காணொலியில் வரவே இல்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால் சிறிது நேரத்தில் வாஷிங்டன் நகரில் இருக்கும் கோல்ஃப் கிளப்பில் உள்ள மைதானத்தில் அதிபர் ட்ரம்ப் கோல்ஃப் விளையாடிய காட்சிகள் வெளியானது.

ஜி20 நாடுகள் மாநாட்டில் கொரானா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் இமானுல் மேக்ரான், தென் கொரிய அதிபர் மூன் ஜா இன் ஆகியோர் பங்கேற்றுப் பேசிய போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டும் பங்கேற்காமல் கோல்ஃப் விளையாடச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அமெரி்க்க அதிபர் தேர்தல் முடிவு ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவாக வந்தது.

இதனையடுத்து உலக நாடுகளின் தலைவர்கள் ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார். இதன் காரணமாகவே அவர் ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: கமலா ஹாரிசை தமிழகத்துக்கு அழைக்கும் மக்கள்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter