அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி திட்டம் டிசம்பர் 11 அல்லது 12 முதல் தொடங்கும்

corona vaccine

கொரோனா பெருந்தொற்றால் உலகமே சிக்கி தவித்துவரும் நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

சுமார் 120 முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கு முதலில் வழங்க வேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

moncef

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி டிசம்பர் 11 அல்லது 12 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தின் தலைவர் மொன்செஃப் ஸ்லாவ் கூறுகையில்,“ தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசி திட்ட தளங்களுக்கு தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

ஒப்புதல் பெற்ற பிறகு, தடுப்பூசி வழங்கும் திட்டம் டிசம்பர் 11 அல்லது 12 முதல் தொடங்கும்” எனக் கூறினார்.

அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசரும் அதன் ஜெர்மன் நிறுவனமுமான பயோஎன்டெக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு (FDA) கொரோனா தடுப்பூசிக்கான அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளன.

தடுப்பூசி ஒப்புதல் குறித்து விவாதிக்க எப்டிஏ ஆலோசனைக் குழு டிசம்பர் 8 முதல் 10 வரை ஆலோசிக்கவுள்ளது.

இதையும் படிக்கலாமே: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெள்ளை மாளிகையில் கிடைத்த கவுரவம்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter