கார் திருடனை நாடே தேடும் சுவாரஸ்யம்!

car

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கார் ஒன்றை திருடிய ஒருவரை காவல்துறை அதிகாரிகள் வலைவீசி தேடிவருகின்றனர்.

புளோரிடா மாகாணத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 50 கொரோனா தடுப்பூசி பாட்டில்கள் இருந்துள்ளன. கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான காரில் இருந்த தடுப்பூசிகளின் மதிப்பு 10 ஆயிரம் டாலர்களாகும்.

தடுப்பூசியுடன் இருந்த காரை திருடி சென்றது யார் என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வளவு விலை மதிப்பான பொருளை காரில் வைத்துகொண்டு அஜாக்கிரதையாக செயல்பட்ட ஓட்டுநர்கள் மீது கண்டனம் எழுந்துள்ளது.

கார் காணாமல் போன கதை மிகவும் சுவாரஸ்யம். அது என்னவென்றால், தடுப்பூசியுடன் சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த காரை பார்க் செய்வதற்கு ஓட்டுநர் திட்டமிட்டுள்ளார்.

இதனால் காரிலிருந்து இறங்கி பார்க் செய்யும் இடத்தை தேடியுள்ளார். இதில் என்ன ஹைலைட் என பார்த்தால், காரை நிறுத்த இடத்தை தேட காரிலிருந்து இறங்கிய போது கார் எஞ்சினை இயங்கும் நிலையிலேயே விட்டுவிட்டு இறங்கி சென்றுள்ளார்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த அந்த வழியே வந்த நபர் ஒருவர், எஞ்சின் இயங்கிய நிலையில் நின்றுக்கொண்டிருந்த காரை சட்டென எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

அந்த மர்மநபரை அமெரிக்கா முழுவதும் அவரை வலை வீசி தேடி வரும் காவல்துறையினர், அவரை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 5,000 டாலர்கள் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

மேலும் கார் திருட்டுபோன பகுதியிலிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.