கங்காருவை கைது செய்த அமெரிக்க காவலர்கள்! இது என்னடா கொடுமையா இருக்கு?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வாகன நடமாட்டம் அதிகமுள்ள தெருவில் துள்ளி குதித்து, சுற்றி திரிந்த கங்காருவை அம்மாகாண காவல்துறையினர் கைது செய்தனர்.

ஃபோர்ட் லாடர்டேல் பகுதியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாலூட்டி விலங்கான கங்காரு, சுற்றித்திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அதனை சுற்றுவளைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணையில் ஃபோர்ட் லாடர்டேல் பகுதியில் வசிக்கும் அந்தோணி மாகியாஸ் என்பவர் அந்த கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்துவந்தது தெரியவந்தது. அந்த கங்காருவின் பெயர் ஜாக்.

kangaroo

இதனை தொடர்ந்து அந்தோணி மாகியாஸ் தான் வீட்டு வேலையில் பிசியாக இருந்த போது ஜாக் கேட் வழியாக வீட்டைவிட்டு சாலைக்கு வந்துவிட்டதாகவும், கடந்த 4 மாதங்களாக ஜாக்கை தான் தான் வளர்த்துவந்ததாகவும் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளை சேர்ந்த விலங்குகளுக்கு, லாடர்டேல் நகருக்குள் வளர்ப்பது சட்டவிரோதம் என்பதால், நகருக்கு வெளியே உள்ள தெற்கு புளோரிடா விலங்குகள் காப்பகத்தில், ஜாக்கை காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

 

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa