அமெரிக்காவில் தொடங்கப்பட்ட தமிழ் பள்ளி!

Tamil School

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லேக் மேரி பகுதியில் புதிதாக தமிழ் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. ‘புளோரிடா தமிழ் அகாடமி’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பள்ளியில் சுமார் 40 மாணவர்கள் மற்றும் 8 தன்னார்வல ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது கொரோனா பரவலால் வகுப்புகள் மெய்நிகர் காட்சி மூலம் நடத்தப்படுகின்றன.

ஓர்லாண்டோவின் வடப் பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்காக இந்த தமிழ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான இந்திய வம்சாவளிகள் வாழ்கின்றனர். அவர்கள் மென்பொருள் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாகவும், மருத்துவர் மற்றும் பொறியாளர்களாவும் உள்ளனர். இவர்களின் குழந்தைகளுக்கே கல்வி கற்பிக்கப்பருகிறது.

Tamil school

அமெரிக்க குழந்தைகளுக்கு உயர்தரமான கல்வி கிடைப்பது மிக சாதாரண விஷயம். ஆனால் அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் உட்பட அனைத்து பாரம்பரிய கல்வியும் கிடைப்பது எட்டாக்கனியாகவே உள்ளது. எனவே இந்த அகாடமி மூலம் இந்திய மாணவர்களுக்கு ஆங்கிலம், அறிவியல், கணிதம், அடிப்படை கம்ப்யூட்டர் கோடிங், செஸ் விளையாட்டு ஆகிய பாடங்கள் நவீன தொழில்நுட்ப முறைப்படி தரமாக கற்பிக்கப்படுகிறது. திரு.வா.சா.குழலன் மற்றும் திரு. மா. இளமதி ஆகியோர் இப்பள்ளியின் நிறுவனர்களாவர். அதேபோல் சுந்தரி இளமதி, ராஜ் சந்தானம், நந்தினி, பிரவீண், ப்ரியா, சதீஷ், ரேகா சந்தோஷ், பானுப்ரியா விஜய், ஜோன் ஆப் ஆர்க் ப்ரெடெரிக், வத்சலா குழலன் ஆகியோர் புளோரிடா தமிழ் அகாடமியில் ஆசிரியராக பணியாற்றுகின்றனர். இவர்கள் மூலம் பொதுமுடக்கத்தால் வீட்டில் முடங்கியிருக்கும், ஏராளமான குழந்தைகள் புதிய விஷயங்களை வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்கின்றனர். இப்படி தமிழர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய இந்த அகாடமி ஒரு நிறுவனம் போல செயல்படாமல் குடும்பம் போல இருப்பதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்கலாமே: அதிபர் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்து போராட்டம்!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook- https://www.facebook.com/tamilmicsetusa
FB Group- https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter – https://twitter.com/tamilmicsetusa