கொரோனா தடுப்பூசிக்காக நாடகமாடிய இளம்பெண்கள்!

young girls

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இரு இளம் பெண்கள் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா மாகாணத்தை சேர்ந்த பெண் இரு பெண்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக மையத்திற்குவந்தனர்.

வயதானவர்கள் போல் உடையணிந்து, முகக்கவசம் அணிந்து இளம்பெண் இருவரும் வயதானவர்கள் போட வேடமிட்டு வந்தனர், சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களின் அடையாள அட்டையை பரிசோதித்தனர்.

இணையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக அவர்கள் விண்ணப்பித்தபோது இருவருக்கும் வயது 65 என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அவர்களுடைய அடையாள அட்டையில் 34 என வயது இருந்துள்ளது.

இருவரையும் தனியாக அழைத்து சென்ற காவல்துறையினர் மோசடியில் ஈடுபடுகிறீர்களா என சரமாரியாக விசாரித்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் இதுபோன்று மோசடி செய்தே முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டது தெரியவந்தது.

கொரோனா தடுப்பூசியை எப்படியாவது போட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் முதியவர்கள் போன்று வேடமிட்டு ஏமாற்றியது தெரியவந்தது.

அமெரிக்காவில் வயதானவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்பட்டுவருகிறது. அதனை இரு இளம்பெண்களும் தவறாக பயன்படுத்தியுள்ளனர்.

இரு பெண்களையும் எச்சரித்த காவல்துறையினர், மையத்திலிருந்து வெளியே துரத்திவிட்டனர்.

மீண்டும் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த பெண்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வழக்குகளும் பதிவு செய்யவில்லை. அப்பெண்கள் அவமானப்பட்டது மட்டுமே மிச்சம்.