கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பீர் இலவசம்!

beer

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அதிதீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

Free beer, other new incentives for Biden's 'vaccine sprint' - WBBJ TV

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.33 கோடியாக உள்ளது. 5 லட்சத்து 95 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். ஜூலை மாதம் வரும் சுதந்திர தினத்துக்கு முன் நாட்டில் உள்ள 70 சதவீத பெரியவர்களுக்கு தடுப்பூசி போட அதிபர் ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவில் 133.6 மில்லியன் பேர் இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் ஜோ பைடனின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் ஆன்யூசெர் புஷ் நிறுவனம் ஜூலை 4 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம் என அறிவித்துள்ளது.