2020 ஆம் ஆண்டின் சிறந்த குழந்தையாக இந்திய வம்சாவளி தேர்வு!

Gitanjali Rao

அமெரிக்காவில் 15 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதாஞ்சலி ராவுக்கு “Kid of the year” என்ற பட்டத்தை கொடுத்து டைம் இதழ் கவுரவித்துள்ளது.

கொலராடோ மாகாணத்தை சேர்ந்த, இந்திய வம்சாவளி சிறுமி கீதாஞ்சலி ராவ். 15 வயதான இவர், அமெரிக்காவின் இளம் விஞ்ஞானியாக அறியப்படுகிறார். கைன்ட்லி என்ற, செல்போன் செயலியை உருவாக்கினார் கீதாஞ்சலி ராவ். இது இணையத்தில் பயனர்களுக்கு எதிராக வரும் அச்சுறுத்தல்களை (cyber bullying) கண்டறியும் செயலியாகும். இதனை செயற்கை நுண்ணறிவு திறனுடன் உருவாக்கியுள்ளார். அதேபோல் டெத்திஸ் எனப்படும் தண்ணீரின் சுத்தத்தை அறிந்து கொள்ள உதவும் செயலி ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்.

Gitanjali Rao, Time magazine’s inaugural kid of the year, has used technology to address contaminated drinking water, opioid addiction and cyber-bullying.
அதுமட்டுமின்றி போதைப் பொருட்களுக்கு அடிமையாவதில் இருந்து மீள்வது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் கீதாஞ்சலி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். சுமார் 5000 பேர் கலந்து கொண்ட போட்டியில் சிறந்த குழந்தையாக தேர்வு செய்யப்பட்ட கீதாஞ்சலி டைம் இதழ் கவுரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கூறிய கீதாஞ்சலி ராவ், “ஒவ்வொருவரிடமும் திறமைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை கண்டறிந்து கட்டமைக்க வேண்டும். நான் சில கண்டுபிடிப்புகளை உருவாக்கி உள்ளேன். இதனை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். நம்மை சுற்றி எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. குறிப்பாக கொரோனா தொற்று பருவநிலை மாற்றம், சைபர் புல்லியிங் எனப்படும் ஆன்லைன் சீண்டல்கள் போன்ற பிரச்னைகளை சமாளிக்க வேண்டியுள்ளது” எனக் கூறினார்.

உலகப்புகழ் பெற்ற டைம் இதழ் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பித்து வருவது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே: ஒரே நாளில் 2.30 பேருக்கு கொரோனா பாதிப்பு; 2,600 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter