இந்தியாவால் உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்து தரமுடியும்- பில்கேட்ஸ்

இந்தியாவால் உலகத்திற்கே கொரோனா தடுப்பு மருந்து தயாரித்து வழங்க முடியும் என மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் உலகமே சிக்கி தவித்துவரும் நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சுமார் 120 முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன. இந்நிலையில் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது.

bill gates

இந்நிலையில் அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள கொரோனா குறித்த ஆவணப்படம் பற்றி பேசிய அவர், இந்தியா சுகாதாரத்துறையில் இன்னல்களை சந்திக்க பெரிய நிலப்பரப்பும், அதிக மக்கள் தொகையும் தான் காரணம் என கூறியுள்ளார். உலகத்துக்கே மருந்து மற்றும் தடுப்பூசி வழங்கிவரும் நிறுவனங்களைக் கொண்ட இந்தியாவுக்கு அத்துறையில் தனி பலம் உண்டு என்று கூறியுள்ள பில்கேட்ஸ், உலகிலேயே அதிகமான தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவில்தான் நடக்கிறது என தெரிவித்துள்ளார். இந்தியாவின் மருத்துவ தொழிற்சாலையால் உலகுக்கே கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

Facebook: https://www.facebook.com/tamilmicsetusa
Twitter: https://twitter.com/tamilmicsetusa