அமெரிக்காவில் மகளிர் தினத்தையொட்டி இந்திய பெண்கள் 7 பேருக்கு விருது

womens day

அமெரிக்காவில் மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவைச் சேர்ந்த ஏழு பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிகட் உள்ளிட்ட மாகாணங்களை சேர்ந்த இந்தியர்கள் கூட்டமைப்பு, சர்வதேச பெண்கள் தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பல்வேறு துறைகளில் சாதனை செய்ய ஏழு பேருக்கு, நினைவு கேடயம், விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய துணை துாதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வதேதராவைச் சேர்ந்த, நவரசனா கல்விக் கழக தலைவரும், துாய்மை இந்தியா திட்டத்தின் துாதருமான, தேஜல் அமின், ஹார்ட்போர்டு ஹெல்த்கேர் மருத்துவமனையில், மருத்துவராக உள்ள, உமா ராணி மதுசூதனா ஆகியோர் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டப்பட்டனர்.

இதேபோல் செவிலியர், ராஷ்மி அகர்வால், பல் மருத்துவர், அபா ஜெய்ஸ்வால், சட்ட ஆலோசகர், சபீனா தில்லான், நடிகையும், தயாரிப்பாளருமான, ராஷனா ஷா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோருக்கு, உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கிய மகளிர் அமைப்பினருக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.