எளிமையாக நடைபெறும் பைடன் பதவியேற்பு விழா!

joe biden

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடனின் பதவியேற்பு விழா மிகவும் எளிமையுடன் பாரம்பரிய ராணுவ அணிவகுப்புடன் நடக்கும் என அதிபர் பதவியேற்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

In light of the pandemic, the PIC will produce a virtual parade across America that will be televised for the American people and feature diverse, dynamic performances in communities across the country.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருக்கிறார்.

பல்வேறு தரப்பினரின் அறிவுரைக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை பைடனிடம் வழங்க ட்ரம்ப் சம்மதித்தார். அதனால், ஜோ பைடன் அமைத்த அதிகார பரிமாற்ற குழுக்கள் மற்றும் பதவியேற்பு குழுக்கள் முழு வீச்சில் தங்கள் பணிகளைச் செய்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன் வரும் 20 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பதவியேற்பு விழா மிகவும் எளிமையாக இருக்கும் என நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வரும் அதிபர் பதவியேற்பு குழு அறிவித்துள்ளது.

இதனிடையே பைடனின் பதவியேற்பு விழாவின்போது முப்படைகளின் தலைவரான அதிபரிடம், அதிகாரத்தை ஒப்படைக்கும் வகையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடக்கும், பதவியேற்பு விழாவுக்கு பின் வெள்ளை மாளிகைக்கு ராணுவ பாதுகாப்புடன் அதிபர் அழைத்து செல்லப்படுவர்.

அமெரிக்க மக்கள் இந்நிகழ்ச்சிகளை வீடுகளிலிருந்தே கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: தடுப்பூசி போட்ட செவிலியர் திடீரென மயங்கிவிழுந்தார்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter