46 ஆவது அதிபராக பொறுப்பேற்றார் பைடன்

Joe Biden

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்டினார்.

ஒருவார இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார்.

ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன். ஆனால், தோல்வியை ஏற்க மறுக்காமல் ட்ரம்ப் பிடிவாதமாக இருந்தார். இதனையும் மீறி தேர்வாளர்களால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் ஆதரவாளர்களும் அத்துமீறி நாடாளுமன்ற கட்டத்துக்குள் நுழைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் 5 பேர் உயிர் இழந்தனர், மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த போராட்டம் ட்ரம்பின் தூண்டுதலால் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் ட்ரம்ப் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்பட்டு ஏராளமானோர் பதவி விலகினர்.

பல்வேறு போராட்டங்களை மீறி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். இதேபோல் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.

முன்னதாக பதவியேற்பு விழாவுக்கு சற்று நேரத்திற்கு முன் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

4 ஆண்டுகளாக ஒத்துழைப்பு கொடுத்த
அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்.

இதையும் படிக்கலாமே: இனி என்ன செய்ய போகிறார் ட்ரம்ப்?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter