ஒரினச் சேர்க்கையாளர்கள் பேரணியில் கலந்துகொண்ட கமலா ஹாரிஸ்

Kamala Harris

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நடந்த ஒரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் மாநாட்டில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்து கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தை பாலின சமத்துவ ஆதரவாளர்கள் pride month -ஆக கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி வாஷிங்டன் நகரில் அவர்கள் பேரணி நடத்தினர். அந்த பேரணியில் கலந்து கொண்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், மக்களுடன் கலந்துரையாடினார்.

Kamala Harris is the first sitting VP to have marched in an LGBTQ pride parade

அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சரிசம உரிமைகள் வழங்குவது மற்றும் பணியிடங்களில் சமமாக நடத்துவது குறித்து மாகாணங்களுக்கு உத்திரவிட மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து வாஷிங்டன் நடைபெற்ற பேரணியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் முன்றாம் பாலினத்தவர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கணவர் Doug Emhoff டன் கலந்து கொண்டார்.

அப்போது, ஓரின சேர்க்கையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்கான உரிமையை வழங்க வேண்டுமென என்று கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.