இந்திய வம்சாவளி அதற்கு சரிவரமாட்டார் என் மகளே பொருத்தமானவர்: அதிபர் ட்ரம்ப்

Ivanka trump

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹரிஸ் அதிபராக இருப்பதற்கு தகுதி வாய்ந்தவர் இல்லை என அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் களம் காண்கின்றனர். தேர்தலில் ஜோ பிடனே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அண்மை காலமாக வெளிவரும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார். மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலானரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார்.

Kamala harris

இதனிடையே வரவிருக்கும் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர். கமலா ஹாரிஸை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பாக மைக் பென்ஸ் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், “ஒரு பெண்ணை அமெரிக்க அதிபராகப் பார்ப்பதை நான் விரும்புகிறேன். ஆனால், அப்பதவிக்கு வெள்ளை மாளிகையின் முதன்மைச் செயலாளர் இவாங்கா ட்ரம்ப்தான் பொருத்தமானவர். கமலா ஹாரிஸ் அந்தப் பதவியில் அமர தகுதியானவர் இல்லை. அவர் அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேறி விடுவார். ஏனெனில் அவர் எந்த வாக்குகளையும் பெற்றிருக்க மாட்டார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் தொடங்கப்பட்ட தமிழ் பள்ளி!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook- https://www.facebook.com/tamilmicsetusa
FB Group- https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter – https://twitter.com/tamilmicsetusa