அமெரிக்காவில் 128 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள 128 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

மான்ஹாட்டன் நகரில் 128 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயம் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த தேவாலயத்தில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அடுத்த சில மணி நேரத்தில் கட்டடம் முழுவதும் பரவிய தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போது தேவாலயத்திலிருந்த அலார்ட் அலாரம் ஒளிக்க தொடங்கியது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், துரிதமாக செயல்பட்டுதீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பல மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இருப்பினும் தீ விபத்தில் கட்டத்தின் பெரும்பாலான பகுதி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

மேலும் பேராலயத்திலிருந்த அரிய புகைப்படங்கள், மர வேலைபாடுகளாலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

Massive NYC fire destroys 19th-century church

விபத்து நடந்தது அதிகாலை என்பதால் இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் தீயை அணிக்க போராடிய 4 தீயணைப்பு வீரர்களுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த தேவாலயம் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ மற்றும் ஓரின சேர்க்கையாளர்களுக்கான அமைப்புகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்ட தேவாலயம் எனக் கூறப்படுகிறது.

அதனால் இந்த விபத்து தற்செயலாக அல்லது திட்டமிட்ட சதியா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த தேவாலயம் 1968 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே: ஒரே நாளில் 2.30 பேருக்கு கொரோனா பாதிப்பு; 2,600 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter