உண்மையில் கொரோனா ‘ட்ரம்ப் வைரஸ்’- அமெரிக்க சபாநாயகர் நக்கல்

கொரோனா ‘சீனா வைரஸ்’ என்று அழைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை விமர்சிக்கும் விதமாக இது சீனா வைரஸ் அல்ல ட்ரம்ப் வைரஸ் என விமர்சனம் எழுந்துள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு சீனாவே காரணம் என்றும். வைரஸ் உருவான தகவலை சீனா மறைத்து விட்டதால் தான் இத்தனை உயிரிழப்புகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும் கொரோனா வைரசை சீன வைரஸ் என்றும் அதிபர் ட்ரம்ப் விமர்சித்து வந்தார்.

Nancy Pelosi

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை அமெரிக்க அதிபர் கையாளுதலை விமர்சித்த அமெரிக்காவின் உயர்மட்ட ஜனநாயகக் கட்சி உறுப்பினர் நான்சி பெலோசி கொரோனா வைரஸை ‘டிரம்ப் வைரஸ்’ என்று விமர்சனம் செய்தார். அமெரிக்காவில் நிலைமை மேலும் மோசமடையும் எனவே மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என ட்ரம்ப் சமீபத்தில் அறிவுரை வழங்கியதை தொடர்ந்து நான்சி பெலோசி இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் கருத்துக்கள் மூலம் அவர் செய்த தவறுகளை உணர்ந்துவிட்டார் என்றும் முதன்முறையாக கொரோனா தாக்கத்தின் தீவிரத்தை ஒப்பு அவர் கொண்டுள்ளார் என்றும் நான்சி பெலோசி தெரிவித்தார். அவரது செயலற்ற தன்மையால் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன்பு மோசமாகிவிட்டது என்றும் சபாநாயகர் பெலோசி விமர்சித்தார்.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa