பேத்தியை பெற்றெடுத்த பாட்டி! 61வயதில் பிரசவம்!!

Gay sons

அமெரிக்காவில் 61 வயதுடைய மூதாட்டி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 61வயது பெண்மணி, தன் மகன் மற்றும் அவரது கணவரின் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மகன் குழந்தையை தாய் எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்ற சந்தேகம் வரலாம். ஆனால் அதுவும் அமெரிக்காவில் நடந்துள்ளது.

61 வயதுடைய மூதாட்டி சிசில் எலெட்ஜ். இவருடைய மகன் மேத்திவ் எலெட்ஜ். மேத்திவ் ஓரின சேர்க்கையாளர் என்பதால் எலியட் டக்ஹர்டி என்ற ஆணை திருமணம் செய்துகொண்டார்.

gay sons
Credits: BBC

அதாவது இருவரும் ஒரே பாலினம் திருமணம் செய்துகொண்டனர். மேத்திவ் எலெட்ஜும், எலியட் டக்ஹர்டியும் தங்கள் குடும்பத்தை விரிவுபடுத்த வேண்டும் என குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினர். எனவே இருவருக்கும் சிசில் வாடகை தாயாக மாறினார்.

ஆனால் 61 வயதான சிசிலால் குழந்தை பெற்றெடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, பல்வேறு சோதனைகளும், நேர்காணல்களும் நடத்தப்பட்டன.

அனைத்து பரிசோதனை முடிவுகளும், சிசில் எலெட்ஜ் வாடகைத் தாயாக இருப்பதற்கு சாதகமாக இருந்தன.

சிசில் எலெட்ஜின் மகன் மேத்திவ் எலெட்ஜ் விந்தணுவையும், டக்ஹர்டியின் சகோதரி லியாவின் கரு முட்டையையும் சிசிலின் வயிற்றுக்குள் செலுத்தப்பட்டு ஐவிஎப் முறைப்படி பெண் குழந்தை பெற்றெடுக்கப்பட்டது. அதற்கு உமா லூயிஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், குழந்தையைப் பெற்றெடுப்பவர் தாயாக கருதப்பட வேண்டும் என இருக்கும் சில சட்டங்களால் உமா லூயிஸின் பிறப்புச் சான்றிதழில், குழந்தையைப் பெற்றெடுத்தவராக சிசில் எலெட்ஜின் பெயரும், மேத்திவ் எலெட்ஜின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்? ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் மீண்டும் தடை!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter