நியூயார்க்கில் தடுப்பூசி போட்டால் ரூ.36 கோடி லாட்டரி பரிசு!

vaccine

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் இதனை தொடர்ந்து மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

A vaccination site at the 34th St subway station in Manhattan. The new incentive, called the “Vax & Scratch”, will allow those who get vaccinated to receive a $20 lottery ticket for the $5m Mega Multiplier Lottery.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ, அடுத்த வாரம் முதல் அதாவது மே 24 முதல் மே 28 வரை “வாக்ஸ் & ஸ்க்ராட்ச்” திட்டம் மூலம் கொரோனா தடுப்பூசி போடும் நியூயார்க்கர்களுக்கு 5 மில்லியன் டாலர் லாட்டரி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர். நியூயார்க்கில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை குறைந்ததால் கூமோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.