கடுங்குளிரில் கல்லறை ஒன்றில் கைவிடப்பட்ட சிறுவன்!

Boy

அமெரிக்காவில் நாயுடன் கல்லறைத் தோட்டம் ஒன்றில் தனித்துவிடப்பட்ட சிறுவன் அவரது தந்தையுடன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.

ஓஹியோவில் உள்ள ஹோப் மெமோரியல் கார்டன்ஸ் கல்லறையிலிருந்து ஒரு நீல நிற கார் வேகமாக சென்றது. இதனை கண்டு சந்தேகமடைந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்றனர்.

அங்கு 2 வயது சிறுவன் ஒரு நாயுடன் நின்று கொண்டிருந்தான். அவனை மீட்ட காவல்துறையினர் விசாரணை செய்து சிறுவனின் தந்தையுடன் ஒப்படைத்தனர்.

சிறுவனை கல்லறைத் தோட்டத்தில் கைவிட்டு சென்றது அவரது தாயார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவன் தாயார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Resist the Mainstream

இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் தற்போது அவனது தந்தையின் பாதுகாப்பில் இருப்பதாகவும், சிறுவனை கல்லறையில் விட்டுச்சென்ற தாயார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த சிறுவன் பெயர் டோனி என்பது தெரியவந்தது.

சிறுவன் டோனியும் அவனது நாயும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லறையில் கைவிடப்பட்டார். சிறுவனின் நிலை குறித்த அறிந்த அப்பகுதி மக்கள் சிறுவனுக்கு ஏராளமான கிறிஸ்துமஸ் பரிசுகளை அனுப்பி வைத்துள்ளனர். அவரது தயார் ஏன் டோனியை கல்லறையில் விட்டு அங்கிருந்து வேகமாக மறைந்தார் என்பது தெரியவில்லை.

கடுமையான குளிரில் 3 வயது சிறுவன் கல்லறையில் தனித்துவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியது!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter