தடுப்பூசி போட்டுக் கொண்டால் கஞ்சா இலவசம்

ganja

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அதிதீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

covid-vaccine

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.34 கோடியாக உள்ளது. 5 லட்சத்து 98 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.

ஜூலை மாதம் வரும் சுதந்திர தினத்துக்கு முன் நாட்டில் உள்ள 70 சதவீத பெரியவர்களுக்கு தடுப்பூசி போட அதிபர் ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் பல மாநில அரசுகள், தடுப்பூசி போட்டுக்கொண்டால் லாட்டரி, பீர் உள்ளிட்ட பரிசுகளை தருவதாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர்.

அந்தவகையில், வாஷிங்டன் மாநிலம் அரசு, 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒரு ரவுண்டு கஞ்சா வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. வாஷிங்டன் மாநிலத்திலும் அதே நிலைமை தான் உள்ளது. முதலில் 6 வாரங்களுக்குள் தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என வாஷிங்டன் அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு அம்மாநில மக்கள் இணங்கவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வராததால் கஞ்சா வழங்கும் முடிவுக்கே அரசு வந்துள்ளது. 2012 முதல் அமெரிக்காவில் கஞ்சா விற்பனைக்கு சட்டபூர்வ அனுமதி உள்ளது.